மயிலாடுதுறை:கிராம விழிப்புணர்வு காவல்குழு மூலம் சைபர்கிரைம் விழிப்புணர்வு முகாம்
வங்கிக்கணக்கில் மோசடி நடந்த 24 மணி நேரத்திற்குள் சைபர்கிரைம் அலுவலக இலவசஎண் 155 / 220 -களில் தெரிவிக்க வேண்டும்
மயிலாடுதுறை அருகே சித்தர்காடு ஊராட்சியில் கிராம விழிப்புணர்வு காவல்குழு சார்பாக சைபர் க்ரைம் குற்றம் தொடர்பாக விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது
மயிலாடுதுறை அருகே சித்தர்காடு ஊராட்சியில் கிராம விழிப்புணர்வு காவல்குழு சார்பாக சைபர் க்ரைம் குற்றம் தொடர்பாக விழிப்புணர்வு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் ரெத்தினவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர் ஆனந்தகண்ணன் ஆகியோர் பங்கேற்று, விழிப்புணர்வு கருத்துகளை எடுத்துரைத்தனர்.
இதில், செல்போன் மூலமாக நடக்கக்கூடிய சைபர் கிரைம் குற்றங்கள், ஓடிபி மூலமாகவோ அல்லது பிற வகையிலும் மோசடியாக வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டால், உடனே பொதுமக்கள் மோசடி நடந்த 24 மணி நேரத்திற்குள் சைபர் கிரைம் 155 / 220 இலவச எண்களில் தொடர்பு கொண்டு தெரிவித்தால், அந்த வங்கி கணக்கு முடக்கப்படும்.
அதைத்தொடர்ந்து, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும், மேலும், சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தங்கள் பெயரிலேயே போலி முகநூல் கணக்கு தொடங்கி, பணம் கேட்டு ஏமாற்றும் குற்றவாளிகள் குறித்தும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தை தொடர்பு கொண்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விளக்கமளித்தனர். இதில் பொதுமக்கள் திறளானோர் கலந்து கொண்டனர்.