மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 75 வாகனங்கள் பறிமுதல் போலீசார் நடவடிக்கை
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 75 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தளர்வில்லா ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி அனுமதி இல்லாமல் வெளியில் சுற்றிய 75 இருசக்கர வாகனம் மற்றும் ஒரு காரினை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை. தேவையின்றி வெளியில் சுற்றியவர்களை தடுத்து நிறுத்தி மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி அறிவுரை.
கரோனா பரவலைத் தடுக்க இன்றுமுதல் தளர்வில்லா ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் காலைமுதல் போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.,
தேவையின்றி வெளியில் வருபவர்களை எச்சரித்து அனுப்பி வருகின்றனர். மேலும், இன்று காலை முதல் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி அனுமதி இல்லாமல் வெளியில் சுற்றிய 75 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு கார் ஆகியன மாவட்டம் முழுவதும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இருப்பினும், மக்கள் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்துக் காணப்பட்டது. இதையடுத்து, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா கூட்டம் அதிகரித்து காணப்பட்ட இடங்களில் தனது வாகனத்தை நிறுத்தி, தேவையின்றி வெளியில் சுற்றுபவர்களை வீடுகளில் தங்கியிருக்க அறிவுறுத்தினார்.
மேலும், அனுமதி பெறாமல் துக்க நிகழ்வில் பங்கேற்க மாவட்டம்விட்டு மாவட்டம் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வேனில் சென்றவர்களை தடுத்துநிறுத்தி அறிவுரைகூறி திருப்பி அனுப்பி வைத்தார்.