மயிலாடுதுறை: சித்த மருத்துவப்பிரிவு சார்பில் கொரோனா விழிப்புணர்வு முகாம்
வளரிளம் பெண்கள் 10 பேருக்கு ரத்த சோகை நீக்கும் அம்மா இயற்கை நலப்பெட்டகம் வழங்கப்பட்டது.
கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் ஆக.1 முதல் ஆக.7 வரை விழிப்புணர்வு முகாம்களை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வகையில், மயிலாடுதுறை அருகே சேத்தூர் ஊராட்சியில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
இதில், யோகா மருத்துவப்பிரிவு சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொடி மற்றும் துளசி எண்ணெய், யூக்லிப்டஸ் எண்ணெய் அடங்கிய நறுமண எண்ணெய் ஆகியவற்றை 100 பேருக்கு யோகா மருத்துவர் காயத்ரி வழங்கினார்.
மேலும், வளரிளம் பெண்கள் 10 பேருக்கு ரத்த சோகையை நீக்கும் கறிவேப்பிலை பொடி, நெல்லிக்காய் பொடி, முருங்கைக்காய் பொடி மற்றும் தேன் அடங்கிய அம்மா இயற்கை நலப்பெட்டகம் வழங்கப்பட்டது. மேலும், யோகா மருத்துவர் காயத்ரி பங்கேற்று, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர், அமுக்கிரா சூரண மாத்திரை ஆகியவற்றை 100 பேருக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.