மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளரைக் கண்டித்து மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்
விதவைப் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது;
மயிலாடுதுறை மின்வாரியத்தில் மின்சார உதவியாளராக பணியாற்றி வந்த கார்த்திகேயன் என்பவர் கடந்த 2012 ஆம் ஆண்டு மின்சாரம் தாக்கி பணியில் இருக்கும் போது உயிரிழந்தார். கருணை அடிப்படையில் இவரது மனைவி ஜெயலட்சுமிக்கு மின்வாரியத்தில் பணி கிடைத்தது.
இந்நிலையில், மின்வாரிய செயற்பொறியாளர் ஆக பணியாற்றி வரும் முத்துக்குமார் என்பவர் ஜெயலட்சுமியிடம் ஆபாசமாக பேசிதகாத செயல்களில் ஈடுபட்டதாக, விஜயலட்சுமி புகார் தெரிவித்துள்ளார். பாலியல் ரீதியான துன்புறுத்தலில் ஈடுபட்டுவரும் ,செயற்பொறியாளர் முத்துக்குமாரை கைது செய்து, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் இன்று மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராஜலட்சுமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்று கண்டன முழக்கமிட்டனர்.