மயிலாடுதுறையில் அமைந்துள்ள ஸ்ரீ மகா துர்க்கை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற மஹா கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறையில் புனுகீஸ்வரர் கீழவீதியில் பழைமை வாய்ந்த ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் இன்று மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று அனுக்ஞை பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து இரண்டு கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, மஹா பூர்ணாஹூதி மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், சிவாச்சாரியார்கள் புனிதநீர் அடங்கிய பூஜிக்கப்பட்ட கடங்களை சுமந்து ஆலயத்தை சுற்றி வந்து விமானத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத, மேள தாளங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், மூலவர் சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.