சுருக்குவலை தொழிலுக்கு அனுமதிக்கக் கோரி ஜூலை 17- மீனவர்கள் உண்ணாவிரதம்
சுருக்குவலை தொழிலுக்கு அனுமதிக்கக் கோரி ஜூலை 17-இல் உண்ணாவிரதம் நடத்தப் போவதாக, ஆட்சியரிடம் மீனவர்கள் மனு கொடுத்தனர்.;
சுருக்குவலை தொழிலுக்கு அனுமதிக்கக் கோரி ஜூலை 17-இல் உண்ணாவிரதம் நடத்தப்போவதாக பூம்புகாரை தலைமை மீனவ கிராமமாக கொண்ட மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
சுருக்குவலை தொழிலுக்கு அனுமதிக்க வேண்டும் அல்லது மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தில் உள்ள அனைத்து வகையான விதிமுறைகளையும் முறையாக கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அந்தந்த மீனவ கிராமங்களில் வரும் ஜூலை 17-இல் உண்ணாவிரதம் நடத்தப்போவதாக பூம்புகாரை தலைமை மீனவ கிராமமாக கொண்ட மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில், சுருக்குவலையை பயன்படுத்தி தொழில் செய்ய அனுமதி அளிக்க வேண்டும், 1983 மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டத்தை அமுல்படுத்தி, 21 வகையான தடைசெய்யப்பட்ட மீன்பிடி தொழிலுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 6-ஆம் தேதி தங்களிடம் (மாவட்ட ஆட்சியர்) மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சுருக்கு வலை தொழிலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் அல்லது மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தில் உள்ள அனைத்து வகையான விதிமுறைகளையும் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 17-ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தில் அந்தந்த மீனவ கிராமங்களில் காலை 9 மணி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.