தமிழ்நாட்டின் வேலைகள் தமிழர்களுக்கே வழங்க வேண்டும்:மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு துறை, அரசின் தொழில் வணிகத்துறை அனைத்திலும் 100 விழுக்காடு தமிழருக்கு வழங்க வேண்டும்;

Update: 2021-10-04 10:24 GMT

மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர் தேசிய பேரியக்கத்தினர்.

தமிழ்நாட்டின் வேலைகள் தமிழர்களுக்கே வழங்க வேண்டும்:மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்
  • whatsapp icon

தமிழ்நாட்டின் வேலைகள் தமிழர்களுக்கே வழங்ககோரி தமிழ் தேசியப் பேரியக்கத்தினர் மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழர் வேலை தமிழருக்கே வழங்கக்கோரி மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு, தமிழ் தேசியப் பேரியக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் தேசிய பேரியக்கத்தின் நகர செயலாளர் பெரியசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அரசு துறை, தமிழ்நாடு அரசின் தொழில் வணிகத்துறை அனைத்திலும் 100 விழுக்காடு தமிழருக்கு வழங்க வேண்டும். வெளி மாநிலத்தவர்களுக்கு வழங்க கூடாது. அதே போல் தனியார் துறையும் 90 விழுக்காடு வேலை தமிழருக்கே வழங்க வேண்டும். வெளி மாநிலத்தவர்களை படிப்படியாக வெளியேற்ற வேண்டும் என்றும், மத்திய அரசு அலுவலங்களில் வட இந்தியகளை திணிப்பதை கண்டித்தும், தமிழ்நாடு அரசு மண்ணின் மைந்தருக்கு வேலைவாய்ப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கமிட்டனர்.

Tags:    

Similar News