தருமபுரம் ஆதீனத்தை வரவேற்ற இஸ்லாமியர்கள்

Update: 2021-04-19 00:52 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் ஏப்ரல் 29-ஆம் நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் இருந்து, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஸ்ரீசொக்கநாத பெருமான் திருவுருவச் சிலையுடன் குரு லிங்க சங்கம பாதயாத்திரையை நேற்று துவக்கினார்.

இன்று தொடர்ந்த இரண்டாம் நாள் யாத்திரையில், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் நீடூர் என்ற பகுதியை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கடந்து செல்லும்போது பெரிய பள்ளிவாசல் முன்பு இஸ்லாமிய பெருமக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். பள்ளிவாசல் நிர்வாகிகள் நவாஸ், அப்துல் பாரி, எஸ்கொயர் சாதிக் உள்ளிட்டோர் தருமபுரம் ஆதீனத்துக்கு சால்வை வழங்கி வரவேற்பு தெரிவித்தனர். அவர்களுக்கு குருமகா சந்நிதானம் பழங்களை வழங்கி அருளாசி கூறினார். இந்து சமய குருமாருக்கு இஸ்லாமிய பள்ளிவாசல் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News