மயிலாடுதுறையில் உளவுப்பிரிவு போலீசாருக்கு மன இறுக்கத்தை போக்க புத்தாக்க பயிற்சி மாவட்ட எஸ்பி தலைமையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உளவுப் பிரிவில் பணியாற்றும் போலீசாரின் மன இறுக்கத்தை போக்கும் வகையில் அவர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவர் பாலவெங்கடேஷ் கலந்துகொண்டு, பிரிவு போலீசாருக்கு பயிற்சி அளித்தார். இதில் ஏடிஎஸ்பி பாலமுருகன், டிஎஸ்பி லாமேக் மற்றும் மாவட்டத்தின் அனைத்து காவல் நிலையங்களில் பணியாற்றும் உளவு பிரிவு போலீசார் கலந்துகொண்டு பயனடைந்தனர்.