முகநூலை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள்: மாவட்ட எஸ்பி. தகவல்
நமது வீட்டுக்குள் உறவினர்கள், நண்பர்களைத் தவிர வெளிநபரை அனுமதிக்காதததைப் போல, முகநூலிலும் கடைப்பிடிக்க வேண்டும்.
முகநூலில் நமது அலைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரியை யாரும் பார்க்காத வகையில் மாற்றி அமைக்க வேண்டும் என்றார் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங்.
முகநூலை பாதுகாப்பாக பயன்படுத்துவது வழிமுறைகள் பற்றி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.சுகுணாசிங் வெளியிட்ட வீடியோவில் அவர் பேசியதாவது : இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை முகநூலை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். நமது வீட்டுக்குள் உறவினர்கள், நண்பர்களைத் தவிர வெளிநபரை அனுமதிக்காதததைப் போல, முகநூலிலும் கடைப்பிடிக்க வேண்டும். நமது முகநூலில் யாரை அனுமதிக்கலாம் என்பதை நாம் முடிவு செய்யலாம். வீட்டைவிட்டு வெளியில் செல்லும்போது வீட்டை பூட்டிவிட்டு செல்வதைப் போல, முகநூலிலும் சேப்டி, செக்ரியூட்டியை எனபில் செய்து பாதுகாப்பானது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
முகநூலில் நண்பர்களோ அல்லது நண்பர்களின் நண்பர்கள் மட்டுமே இணையும் வகையில் முகநூல் செட்டிங்ஸ்ஸை தேர்ந்தெடுக்க வேண்டும். முகநூலில் நமது அலைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரியை யாரும் பார்க்காத வகையில் மாற்றி அமைக்க வேண்டும். நாம் முகநூலில் இருப்பதை கூகுள், யாகூ போன்ற ஆப்ஸ் மூலம் யாரும் பார்க்க முடியாத வகையில் செட்டிங்ஸ்ஸை பாதுகாப்பானதாக மாற்ற வேண்டும். இவ்வாறு செய்வதன்மூலம் உங்களது முகநூலை உங்களுக்கு தெரிந்தவர்கள் மட்டுமே பார்க்க இயலும்.
மேலும், சேப்டி பாராமீட்டர் என்ற இடத்தில், பேஸ்புக், மெசஞ்சர், ஈ-மெயில் என்றிருக்கும் மூன்றையும் செலக்ட் செய்தன் மூலம் உங்களது பாஸ்வேர்டை வெறொருவர் திருட்டுத்தனமாக உள்நுழைய முயற்சிக்கும் போது, நீங்கள் அதனை சுலபமாக கண்டறிய முடியும். மேலும், உங்களது பாஸ்வேர்டை யாரும் சுலபத்தில் யூகிக்க முடியாததாக அமைத்துக் கொள்ளுங்கள். முகநூலை பயன்படுத்தும் அனைவரும் மேற்கூறியவற்றை செய்து முகநூலை பாதுகாப்பான முறையில் உபயோகப்படுத்துகிறீர்கள் என்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம் என்று அதில் கூறியுள்ளார்.