மயிலாடுதுறை அருகே மழையால் வீடு இடிந்தவருக்கு பூம்புகார் எம்.எல்.ஏ. ஆறுதல்
மயிலாடுதுறை அருகே மழையால் வீடு இடிந்தவருக்கு பூம்புகார் எம்.எல்.ஏ. ஆறுதல் நிவேதா எம். முருகன் எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.;
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி செம்பனார்கோவில் ஒன்றியம் கொத்தங்குடி ஊராட்சியில் தொடர் கனமழையால் மரியசெல்வம் என்பவரின் வீடு இடிந்து பாதிப்புக்குள்ளானது. தகவல் அறிந்து வந்த பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் ஆறுதல் கூறி தனது சொந்த நிதியிலிருந்து ரூ-5000 வழங்கினார்.
மேலும், அரசு அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சலுகைகள் மற்றும் வீடு கட்டுவதற்கான ஏற்பாடுகளை உடனே செய்து தரக்கோரி உத்தரவிட்டார். மேலும் கொத்தங்குடி ஊராட்சி பகுதிகளில் பாதிப்புக்குள்ளான பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு அதிகாரிகளிடம் உத்தரவிட்டார்.
ஆய்வின்போது செம்பை ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக், ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர். மற்றும் தி.மு.க. பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர்.