விநாயகர் சதுர்த்தி : சீர்காழியில் இந்து மக்கள்கட்சி தொடர் உண்ணாவிரதம்

விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி சீர்காழியில் தொடர்உண்ணாவிரதம்

Update: 2021-09-03 13:44 GMT

விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி சீர்காழியில் தொடர்உண்ணாவிரத்தை தொடங்கியுள்ள இந்து மக்கள் கட்சியினர்

விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சீர்காழியில் இந்து மக்கள் கட்சியினர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தில் வரும்    10   -ஆம்  தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாடு காரணமாக, விநாயகர் சதுர்த்திக்கு கோயில்கள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபடவும், ஊர்வலமாக சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள், பிரதிஷ்டை செய்யவும், ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஆபத்து காத்த விநாயகர் கோவில் எதிரே, இந்து மக்கள் கட்சி சார்பில், அதன் மாநில செயலாளர் சுவாமிநாதன் தலைமையில், அக்கட்சியினர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர் . இந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தையொட்டி,  அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News