மயிலாடுதுறை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கன மழை: நெல்மூட்டைகள் நனையும் அபாயம்

மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில், மங்கைநல்லூர், மணல்மேடு உள்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Update: 2021-09-02 14:15 GMT

மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் தொடர் மழை

மயிலாடுதுறை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது  

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில், மங்கைநல்லூர், மணல்மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. தற்போது குறுவை அறுவடை செய்த  நெல் மூட்டைகள், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நெல் மூட்டைகள் மழையில் நனையும் என  விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

Tags:    

Similar News