மயிலாடுதுறையில் அரசு பேருந்து-பைக் மாேதல்; ஒருவர் உயிரிழப்பு

மயிலாடுதுறையில் பைக் மீது அரசு பேருந்து மாேதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-08-11 13:23 GMT

ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட விபத்தில் பலியான முகமது ரபீக்கின் உடல்.

மயிலாடுதுறை அருகே எலந்தங்குடி பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக் (60). வெளிநாட்டில் வேலை பார்ந்து வந்த இவர், கடந்த மாதம் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் எலந்தங்குடியிலிருந்து மயிலாடுதுறை வழியாக ஆடுதுறைக்கு தனது மனைவி அராபத் நிஷாவுடன் இருசக்கர வாகனத்தில் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளர். அப்போது மயிலாடுதுறை கண்ணாரத்தெரு முக்கூட்டு பகுதியில் சென்று போது பின்பக்கமாக வந்த அரசு பேருந்து மோதியது.

இதில் இரண்டு பேரும் நிலைத்தடுமாறி கிழே விழுந்துள்ளனர். இதனால், முகமது ரபீக் தலையில் அரசு பேருந்தின் முன்பக்க சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் அவரது மனைவி அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதையடுத்து தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அரசு பேருந்தை கைப்பற்றி ஓட்டுனர் கார்திகேயன் என்பவரை கைது செய்து, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மயிலாடுதுறையில் கண்ணாரத்தெரு முக்கூட்டு 50மீட்டர் தூரத்திற்கு கடந்த 1ஆண்டுக்கு மேலாக சாலை சரியில்லாமல் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அடிக்கடி விபத்து நடப்பதாகவும், இந்த விபத்தும் சரியில்லாத சாலையால் ஏற்பட்டதாகவும் உடனடியாக சாலை சரிசெய்ய பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News