சேமிப்புக் கிடங்கு கட்டுமான பணிக்கு அடிகல் நாட்டு விழா
வேளாண்மை விரிவாக்க மைய விதை சேமிப்புக் கிடங்கு கட்டுமான பணியை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பாலையூர் கிராமத்தில் 2020-21 ஆண்டுக்கான நபார்டு ஆர்.ஐ.டி.எஃப் திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் வேளாண்மை விரிவாக்க மைய விதை சேமிப்பு கிடங்கு கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பூம்புகார் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நிவேதா முருகன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி கட்டுமான பணியினை துவங்கி வைத்தார். இதில் குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், துணைத்தலைவர் முருகப்பா, குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் மற்றும் வேளாண் அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.