தேர்தலையொட்டி காவல்துறையினர் கொடி அணிவகுப்பு..!

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பதற்றமான வாக்குச்சாவடிப் பகுதிகளில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.;

Update: 2024-04-05 09:45 GMT

அச்சமின்றி வாக்களிக்க மயிலாடுதுறையில் காவல்துறை நடத்திய கொடி அணிவகுப்பு ஊர்வலம்.அணிவகுப்பில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள்.

மயிலாடுதுறை:

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என்று கண்டறியப்பட்ட வாக்குச்சாவடி பகுதிகளில்  காவல்துறையினரால் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வருகின்ற 19 ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலின் போது பதற்றமான வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் எவ்வித அச்சமின்றி வாக்களிக்கவும்,பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் பெரம்பூர் காவல் ஆய்வாளர் தலைமையில்,குத்தாலம் காவல் ஆய்வாளர்,காவல் ஆளினர்கள் மற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் கலந்துகொண்டு கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அந்த அணிவகுப்பு  வழுவூர் மெயின் ரோட்டில் துவங்கி பண்டாரவடை,தத்தங்குடி வழியாக மங்கைநல்லூர் கடைத்தெருவில் முடிவடைந்தது.இதில் 74 காவல்துறையினர் பங்கேற்றனர். 

2024 ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலின்படி, தேர்தல் ஏப்ரல் 19 ம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி முடிவடைகிறது. ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த ஆண்டு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 26ம் தேதியும், 4 ம் கட்டத் தேர்தல் மே 7ம் தேதியும், 5 ம் இடத்துக்கு மே 20ம் தேதியும், 6 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. மே 25ம் தேதியும், 7 வது கட்டம் ஜூன் 1ம் தேதியும் நடைபெறும், ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.

Tags:    

Similar News