சீர்காழி அருகே கடல் சீற்றத்தால் கட்டுமரம் கவிழ்ந்து மீனவர் உயிரிழப்பு

அலையில் அடித்து செல்லப்பட்ட ஜெயபாலை சக மீனவர்கள் தொடர்ந்து தேடிய நிலையில், அதே பகுதியில் ஜெயபால் உடல் கரை ஒதுங்கியது.

Update: 2021-08-18 17:17 GMT

சீர்காழி அருகே கடல் சீற்றத்தால் கட்டுமரம் கவிழ்ந்து மீனவர் உயிரிழந்த  சம்பவம் குறித்து கடற்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த கொட்டாயாமேடு சுனாமி நகரை சேர்ந்தவர் மீனவர் ஜெயபால். இவர், இன்று காலை கட்டுமரத்தின் மூலம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். கரையோர பகுதியில் மீன்பிடிக்க முயன்ற போது, திடீரென    கடல் சீற்றம் ஏற்பட்டு அலையில் சிக்கி கட்டுமரம் கவிழ்ந்தது. இதில், நிலை தடுமாறி ஜெயபால் கடலில் விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மீனவர்கள்,  விரைந்து சென்று ஜெயபாலை காப்பற்ற முயன்றனர்.ஆனால், அலையில் அடித்து செல்லப்பட்ட மீனவர்  ஜெயபால்   கடலில் மூழ்கி மாயமானார்.  சக மீனவர்கள் தொடர்ந்து தேடிய நிலையில், சற்று நேரத்தில் அதே பகுதியில் ஜெயபால் உடல் கரை ஒதுங்கியது. கடற்கரை காவல் நிலைய போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக   வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News