டெல்லி பெண் காவலர் படுகொலை சம்பவம்: மயிலாடுதுறையில் தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்
டெல்லியில் பெண் காவலர் சபியா பாலியல் பலாத்காரம் செய்து, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
டெல்லியில் பெண் காவலர் சபியா கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தியும் மயிலாடுதுறையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
டெல்லியில் கடந்த வாரம் சபியா என்கிற பெண் காவலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தியும் மயிலாடுதுறையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் பஹ்ருதீன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் முஹம்மது ஒலி பங்கேற்று கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், பெண்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.