மயிலாடுதுறையில் சாலையில் நெல் மூட்டைகளை அடுக்கி விவசாயிகள் போராட்டம்

மயிலாடுதுறையில் விவசாயிகள் நெல் மூட்டைகளை சாலையில் அடுக்கி வைத்து போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2021-09-14 15:21 GMT

மயிலாடுதுறையில் விவசாயிகள் சாலையில் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து போராட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை அருகே அருண்மொழித்தேவன் ஊராட்சியில் கடந்த ஆண்டு தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இதன் மூலம் அருண்மொழி தேவன், உக்கடை, கோட்டூர், பில்லாளி, கங்கணம்புத்தூர், தேவனூர், கடுவங்குடி உள்ளிட்ட கிராம விவசாயிகள் தங்கள் நெல்லை விற்பனை செய்து வந்தனர்.

இந்த நிலையில் குறுவை சாகுபடி செய்து அறுவடை செய்த நெல்லை அருண்மொழிதேவன் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 5000 முட்டைகளுக்கு மேல் விவசாயிகள் அடுக்கி வைத்து விற்பனை செய்வதற்காக காத்திருந்து வருகின்றனர். ஆனால் தற்போது வரை கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் டிராக்டரில் நெல் மூட்டைகளை எடுத்துவந்து நீடூர் ரயில்வே கேட் பகுதியில் சாலையை மறித்து நெல் மூட்டைகளை அடுக்கிவைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மயிலாடுதுறை மணல்மேடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த மயிலாடுதுறை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலை கைவிட்டனர்.

Tags:    

Similar News