பல்வேறு அரசு அலுவலகங்கள் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2021-08-16 15:04 GMT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் பல்வேறு அரசு அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் 

மயிலாடுதுறையில் நெடுஞ்சாலை துறை அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியரகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி மற்றும் சரண் விடுப்பை உடனடியாக வழங்க வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News