பூம்புகார் திமுக வேட்பாளர் நிர்வாகிகள் சந்திப்பு

பூம்புகார் சட்டமன்ற திமுக வேட்பாளர் செம்பை வடக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்து மரியாதை செய்தார்.;

Update: 2021-03-20 09:48 GMT

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி, செம்பை வடக்கு ஒன்றியம், கீழப்பெரும்பள்ளம் ஊராட்சியில் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பூம்புகார் தொகுதி சட்டமன்ற வேட்பாளருமான நிவேதா எம். முருகன் தேர்தல் அலுவலகம் திறந்து வைத்தார். பின்னர் வீடு வீடாக  பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

மேலும், திமுக நிர்வாகிகளை சந்தித்து மரியாதை செலுத்தினார். ஊராட்சிகளில் திமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து வரவேற்றனர். வேட்பாளரான நிவேதா முருகனுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் மாற்று கட்சியில் இருந்து விலகி நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இதில் செம்பை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பி.எம்.அன்பழகன், நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் ஞானவேலன், நாகை வடக்கு மாவட்ட பொருளாளர் ஜி.என்.ரவி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எம்.சித்திக், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் அமிர்த விஜயகுமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News