தொடர் மழை எதிரொலி: மயிலாடுதுறையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா உத்தரவிட்டுள்ளார்.;

Update: 2021-11-08 02:20 GMT

மயிலாடுதுறையில் தொடர் மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என வானிலை தெரிவித்திருந்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கி லேசான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக 31 மில்லி மீட்டர் மழையும், சராசரியாக 26.28 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News