மயிலாடுதுறையில் மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்.

Update: 2021-07-19 15:00 GMT

மயிலாடுதுறை செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதிய மின்சார சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மின்துறையை தனியாருக்கு தாரைவார்க்கும் மின்சார சட்ட சமேதாவை ரத்து செய்ய வேண்டும், புதிய தொழிலாளர் நல சட்டங்களை திருத்தம் செய்வதை வாபஸ் பெற வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொறியாளர் சங்கத் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News