மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலை கேட்கும் மாற்றுத்திறனாளி களுக்கு 15 நாளுக்கு வேலை வழங்காவிட்டால் அகற்கு அரை நாள் சம்பளம் வழங்க வேண்டும்
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாவட்ட பொறுப்பாளர் கணேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தின்படி 100 நாள் வேலை மாற்றுத்திறனாளிகளுக்கு முழு சம்பளத்துடன் 100 நாள் வேலை வழங்க வேண்டும்.
100 நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு 15 நாளுக்கு வேலை வழங்காவிட்டால் அடுத்த நாள் முதல் அரை நாள் சம்பளம் வழங்க வேண்டும். தனி என்.எம்.ஆர் பதியப்பட வேண்டும், வேலை அட்டை வழங்காத மாற்றுத்திறனாளி களுக்கு உடன் வேலை அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.