முக்கரும்பூர் ஊராட்சிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட மாத்தூர், முக்கரும்பூர் ஊராட்சிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

Update: 2021-07-24 09:45 GMT

முக்கரும்பூர் ஊராட்சியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் ஊசி போட்ட்டுக் கொண்ட  நபர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மாத்தூர் மற்றும் முக்கரும்பூர் ஊராட்சிகளில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் முகாமை தொடங்கி வைத்தார்.

இந்த முகாமில் பொதுமக்கள் சுமார் 1000 நபர்களுக்கு மேல் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வமுடன் கலந்து கொண்டனர். பின்னர் பேசிய பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கொரோனா தடுப்பூசி குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என்று பொதுமக்களிடம் விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதில் செம்பை ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், நாகை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக், துணை பெருந்தலைவர் மைனர் பாஸ்கர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்எம் சித்திக், தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் ஸ்ரீதர் ,ஊராட்சி மன்ற தலைவர்கள் குமார் , ராஜலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

Tags:    

Similar News