கொரோனா: ஆடிஅமாவாசைக்கு காவிரி ஆற்றில் தர்ப்பணம் அளிக்க முடியாமல் மக்கள் அவதி
மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் தர்ப்பணம் அளிக்க வந்த பொதுமக்களை போலீசார் அனுமதிக்காததால் . காவிரிக்கரை வெறிச்சோடி காணப்பட்டது.
கொரோனா முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி ஆற்றில் பொதுமக்கள் கூட தடைவிதிக்கப்பட்டுள்ளதால் ஆடிஅமாவாசையான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்க முடியாமல் பொதுமக்கள் அவதி:-
கொரோனா 3வது அலை உருவாக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேற தடுப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 1ம்தேதி முதல் 9ம் தேதி வரை கடற்கரைகள் மற்றும் ஆறு, கிளை ஆறுகளில் பொதுமக்கள் கூடவும் முக்கிய வழிபாட்டு தளங்களில் பக்தர்கள் கூடவும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தடை விதித்துள்ளார்.
இந்நிலையில், ஆடி அம்மாவாசை தினத்தில் பித்ருலோகத்திலிருந்து பூமியை நோக்கி மூதாதையர்கள் வரும் நாள் என்று கருதப்படுவதால் பொதுமக்கள் தங்கள் முன்னேனார்களுக்கு மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் தர்பணம் அளிப்பது வாடிக்கை. கொரோனா எச்சரிக்கையால் நீர் நிலைகளில் கூட தடை உள்ளதால் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரி ஆற்றின் கரையில் தர்ப்பணம் அளிக்க வந்த பொதுமக்களை போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் காவிரிக்கரை வெறிச்சோடி காணப்பட்டது. காவிரி துலாக்கட்டத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்ததால் தர்ப்பணம் அளிக்க வந்த பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பலர் காவிரி திம்மநாயக்கன் படித்துரைக்கு சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.