மயிலாடுதுறை கூறைநாடு நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவருக்கு கொரோனா தொற்று
மாணவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவர்கள் 100 பேர் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்
மயிலாடுதுறை கூறைநாடு நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவருக்கு கொரோனா தொற்று. உறுதிசெய்யப்பட்டதால், சகமாணவர்கள் 100 பேருக்கு சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததால் கடந்த 1 -ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு காய்ச்சல் இருந்ததால் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் அவருடன் வகுப்பில் படித்த மாணவர்கள் மற்றம் தொடர்பில் இருந்த மாணவர்கள் 100 பேர் மற்றும் ஆசிரியர்களுக்கு பள்ளியில் சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதனால் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் அச்சமடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏற்கெனவே, அரசு மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த மூன்று மாணவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.