இருபிரிவினரிடையே மோதல்; பரபரப்பு வீடியாே காட்சி வெளியாகியதால் போலீஸ் குவிப்பு
அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்த வீடுகளை பிடுங்கி எறியும் பரபரப்பு வீடியோ காட்சிகளால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியம் நரசிங்க நத்தம் என்ற கிராமத்தில் நரசிங்கநத்தம், கீழ காலனி, சாமியாங்குளம் ஆகிய பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட தலித் குடும்பத்தினர் வாய்க்கால் புறம்போக்கு பகுதியில் வசித்து வருகின்றனர்.
இவர்கள் பட்டா கேட்டு காத்திருக்கும் நிலையில், நரசிங்க நத்தம் களம் புறம்போக்கு பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதாக கூறி மற்றொரு தரப்பினர் களம் புறம்போக்கு பகுதியை ஜேசிபி வாகனம் கொண்டு சுத்தம் செய்து உள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதிக்கு வந்த தாழ்த்தப்பட்ட பிரிவினர் 25க்கும் மேற்பட்ட குடிசைகளை அமைத்தனர். இச்சவம் தொடர்பாக வருவாய்துறையினர் மற்றும் பெரம்பூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த மற்றொரு தரப்பினர் குடிசைகளை அடித்து நொறுக்கி பிய்த்து எறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து இரண்டு தரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழல் எற்பட்டதை தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து தரங்கம்பாடி தாசில்தார் ஹரிதரன்; முன்னிலையில் வருவாய்த்துறையினர் மீதம் இருந்த குடிசைகளை அகற்றினர்.
மீண்டும் பிரச்சனை ஏற்படாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குடிசைகள் மீது ஒரு பிரிவினர் தாக்குதல் நடத்தும் நேரடி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.