தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் பதக்கங்களை குவித்து மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு

மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்களை குவித்த மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டுக்களை தெரிவித்தார்.

Update: 2021-04-23 05:00 GMT

புதுதில்லி தல்கதோரா ஸ்டேடியத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சீக்கிய விளையாட்டு போட்டியில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றதில் பிரதானமாக சிலம்பப் போட்டிகள் 5 வயது முதல் 7 வயது வரையிலும், 8 வயது முதல் 12 வயது வரையிலும், 13 வயது முதல் 15 வயது வரையிலுமான போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் தமிழகத்திலிருந்து சீர்காழி வீரத்தமிழர் சிலம்பாட்டக்கழகம் மற்றும் காரைக்கால் மாவட்டத்திலிருந்து குமார் மார்ஷியல் ஆர்ட்ஸ் கழகத்தை சேர்ந்த மொத்தம் 54 பேர் பங்கேற்றனர்.

சீர்காழி வீரத்தமிழர் சிலம்பாட்டக் கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 9 தங்கப்பதக்கம் மற்றும் 8 வெள்ளிப்பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனர். 6 வயது சிறுவன் அபித்ஹரி சிலம்பத்தில் தங்கப்பதக்கமும், சுருள்வாள் சுழற்றலில் வெள்ளிப்பதக்கமும் பெற்றான்.

இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற வீரர்கள் சர்வதேசப் போட்டியில் கலந்துகொள்ளும் தகுதியை பெற்றனர். இந்நிலையில், வெற்றி பெற்று சொந்த ஊர் திரும்பிய வீரர்கள் மற்றும் சிலம்பாட்ட பயிற்சியாளர்கள் ஆகியோர் மயிலாடுதுறை ஆட்சியர் இரா.லலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Tags:    

Similar News