.கோவை ஐ.எஸ்.ஐ.எஸ் வழக்கு குற்றவாளி மயிலாடுதுறையில் கைது
ஐ.எஸ்.ஐ.எஸ் வழக்கில் ஜாமீனில் வெளிவந்து மயிலாடுதுறையில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை நீதிமன்ற உத்தரவுப்புடி பிடிவாரண்டில் தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு கோயமுத்தூர் ஐஎஸ்ஐஎஸ் வழக்கில் தொடர்புடைய முகமது ஆசிக் என்ற நபர் தேசிய புலனாய்வு துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஜாமீனில் வெளிவந்த முகமது ஆசிக் மயிலாடுதுறை அருகே நீடூரில் கோழி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஆஜராகுமாறு நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியும் முகமது ஆசிக் ஆஜராகவில்லை. இதனையடுத்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் நேற்று நள்ளிரவு நீடூர் சென்று மயிலாடுதுறை காவல்துறை உதவியுடன் முகமது ஆசிக்கை கைது செய்து சென்னை அழைத்துச் சென்றனர்.