தரங்கம்பாடி: கொரோனா நிவாரண நிதி வழங்கிய ஒய்வு பெற்ற அலுவலர்கள்
ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் சார்பில் ரூ. 85 ஆயிரத்துக்கான வரைவோலையை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகனிடம் வழங்கினர்;
ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் சார்பில் முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்காக திரட்டப்பட்ட ரூ. 85 ஆயிரத்துக்கான வரைவோலையை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகனிடம் வழங்கினர்
தரங்கபாடி வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் சார்பாக, முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகனிடம், முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்காக, திரட்டப்பட்டிருந்த ரூ. 85 ஆயிரத்துக்கான வரைவோலையை சங்க நிர்வாகிகள் வழங்கினர். இதையடுத்து, சங்கத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசி முகாமினை, சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார். இதில், தரங்கை வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க தலைவர், செயலாளர், பொருளாளர், உறுப்பினர்கள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.