உங்கள்தொகுதியில் முதலமைச்சர் திட்டம்: மனுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
தமிழக அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் முழுமையாக அறிந்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்தார்;
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கான நலத்திட்ட உதவிகளை; மாவட்ட ஆட்சியர் லலிதா வழங்கினார்.
தமிழக முதலமைச்சர் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் மனுக்களை பெற்று, அம்மனுக்கள் 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதியை அளித்திருந்தார். அதன்படி, ஒவ்வொரு தொகுதியிலும் மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் லலிதா வழங்கினார்.
இதில், 85 நபர்களுக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.85 ஆயிரம் மதி;ப்பிலான ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையும், 10 நபர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணையும், 25 நபர்களுக்கு பட்டா மாற்றம் ஆணையும், 24 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டையும் வழங்கப்பட்டது. மேலும், ரூ.37 கோடியே 01 லட்சத்து 3 ஆயிரத்து 900 மதிப்பிலான சாலை அமைத்தல், குடிநீர் வசதி மேற்கொள்ளுதல் போன்ற திட்டப்ணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு பல்வேறு திறன்மேம்பாட்டு பயிற்சி வேலைவாய்ப்புத்துறை மூலம் வழங்கப்படுகிறது. தமிழக அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் முழுமையாக அறிந்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜ்குமார் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் உள்பட பலதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.