1000 டன் நெல் அரவைக்காக சென்னைக்கு அனுப்பி வைப்பு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தினர் 1000 டன் நெல்லினை சரக்கு ரயில் மூலம் அரவைக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

Update: 2021-07-23 15:15 GMT

சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்ட 100 டன் நெல்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தினர் கிடங்குகளில் அடுக்கி வைத்துள்ளனர். அந்த நெல் மூட்டைகளை அரவை மில்லுக்கு அனுப்பி அவற்றை அரிசியாக்கி ரேஷன் கடைகளுக்கு விநியோகத்திற்கு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், மயிலாடுதுறை, தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் தாலுக்காக்களில் கொள்முதல் செய்யப்பட்டு, கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 25,000 நெல் மூட்டைகளை (1000 டன்) லாரிகள் மூலம் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் உள்ள சரக்கு ஏற்றும் பிரிவுக்கு கொண்டு சென்று சரக்கு ரயிலில் 21 வேகன்களில் (பெட்டி) ஏற்றினர். இந்த நெல் மூட்டைகள் சென்னை உள்ள அரவை ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இப்பணியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் கண்காணித்தனர்.

Tags:    

Similar News