திருவாலங்காடு ஸ்ரீ வடாரண்யேசுர சுவாமி கோவில் திருத்தேர் வடம் பிடித்தல்..!
திருவாலங்காட்டில் ஸ்ரீ வண்டார்குழலி அம்பிகை உடனாய ஸ்ரீ வடாரண்யேசுர சுவாமி திருக்கோயில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியை திருவாவடுதுறை ஆதீனம் தொடங்கி வைத்தார்;
திருவாலங்காட்டில் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ வண்டார்குழலி அம்பிகை உடனாய ஸ்ரீ வடாரண்யேசுர சுவாமி திருக்கோயில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியை திருவாவடுதுறை ஆதீனம் தொடங்கி வைத்தார்
திருவாலங்காடு:
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே திருவாலங்காட்டில் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ வண்டார்குழலி அம்பிகை உடனாய ஸ்ரீ வடாரண்யேசுர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.இந்த கோவிலின் பங்குனி உத்திர பிரம்மோற்சவ பெருவிழா கடந்த 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து சந்திர பிறை வாகனம்,சிம்ம வாகனம்,கற்பக விருட்சம் வாகனம்,யானை வாகனம்,ரிஷப வாகனம்,நாக வாகனம்,குதிரை வாகனம், உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா மற்றும் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சிகள் நடைபெற்று 9-ம் நாள் திருவிழாவான இன்று திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு திருத்தேருக்கு எழுந்தருளினர் பின்னர் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் திருத்தேர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார் தொடர்ந்து வானவேடிக்கைகள்,மேளதாளங்கள் முழங்க திருத்தேர் நான்கு ரத வீதிகளையும் வலம் வந்து திருத்தேர் நிலையை அடைந்தது.
அப்போது பக்தர்கள் தங்களது இல்லங்கள் தோறும் தீபாராதனை எடுத்து வழிபாடு செய்தனர்.பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை விழா குழுவினர்,கோவில் நிர்வாகத்தினர்,கிராமவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர்.