மயிலாடுதுறை: பாஜக சார்பில் வ.உ.சி 150-ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்
தமிழகம் முழுவதும் வ.உ.சியின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.
மயிலாதுறையில் சுதந்திரப்போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் 150 -ஆவது பிறந்த நாள் பாஜக சார்பில் கொண்டாடப்பட்டது.
இந்திய சுதந்திர போராட்டத்திற்காக சிறையில்'செக்கிழுத்தத் தியாகச் செம்மல்', கப்பலோட்டியத் தமிழன் தியாகி வ.உ.சிதம்பரனாரின் 150-ஆவது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், மயிலாடுதுறை பாஜக நகர அலுவலகத்தில் வ. உ. சி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நகர தலைவர் மோடி.கண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜகவினர் பட்டாசு வெடித்து, வ.உ.சி யின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி. சேதுராமன் உள்ளிட்ட நகர, மகளிரணி, பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.