வீதிகளில் உள்ள குப்பைகளை கைகளால் அகற்றி வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்

மயிலாடுதுறை நகராட்சி 6 வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வீதிகளில் உள்ள குப்பைகளை கைகளால் அகற்றி வாக்கு சேகரித்தார்;

Update: 2022-02-08 15:06 GMT

குப்பைகளை கைகளால் அள்ளும் பாஜக வேட்பாளர்  

மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் மயிலாடுதுறை நகராட்சியில் 6வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பாரதிகண்ணன் நூதனமுறையில் பொதுமக்களிடம் வாக்குசேகரித்தார். தோப்புதெருவில் வீடுவீடாக சென்று வாக்குசேகரித்த வேட்பாளர் வார்டில் உள்ள குப்பைகளை கூட்டி கைகளால் அள்ளி அப்புறப்படுத்தினார்.

6வது வார்டை தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் சுகாதாரமாக மாற்றுவேன் என்று கூறி முழக்கமிட்டு பொதுமக்களிடம் வாக்குசேகரித்தார். இந்தமுறை தனக்கு வாய்ப்பு தாருங்கள் தினந்தோறும் குப்பைகளை தானே அள்ளுவதாகவும் அவர் வாக்காளர்களிடம் கூறினார்.

Tags:    

Similar News