பூம்புகாரில் காமராஜர் 119 வது பிறந்தநாள் விழா

காமராஜர் 119 வது பிறந்தநாள் விழாவில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.;

Update: 2021-07-15 06:15 GMT

காமராஜரின் சிலைக்கு நாகை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்து பொறையாரில் நாடார் மகாஜன சங்க கட்டிடத்தில் அமைந்துள்ள பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் திருவுருவ சிலைக்கு நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், மாணவர்களுக்கு இனிப்புகள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கி காமராஜரின் பெருமைகளைப் பற்றி சிறப்புரையாற்றி பேசினார். நிகழ்ச்சியில், குத்தாலம் ஒன்றிய பெருந்தலைவர் மகேந்திரன் மற்றும் திராவிட முன்னேற்ற கழக பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News