பக்ரீத் பண்டிகை: அரங்கக்குடி பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை
அரங்கக்குடி பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபட வேண்டி தொழுகை நடைபெற்றது.;
மயிலாடுதுறை அருகே அரங்கக்குடியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் சிறப்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு வாழ்வில் வளமோடு ஒற்றுமை உணர்வோடு சிறப்புற்று வாழவும், கொரோனா பெருந் தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபடவும் தொழுகை நடத்தினர். தொழுகை முடிந்து ஒருவருக்கொருவர் தங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது.