மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் உதவித் தொகையை உயர்த்தி தரக் கோரி மாற்றுத்திறனாளிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த்தினர்.

Update: 2021-08-27 07:00 GMT

மாற்றுத்திறனாளிகள் சார்பில் நடைபெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுகவினர் தேர்தல் வாக்குறுதியில், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை 1000இருந்து 1500ஆக உயர்த்தி தரப்படும் என தெரிவித்தனர். தற்போது ஆட்சி அமைத்து நூறு நாட்களுக்கு மேல் ஆகியும் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. எனவே நடப்பு சட்டமன்ற கூட்ட தொடரிலேயே மாற்றுத்திறனாளிக்கான மாத உதவித்தொகை 1500 ஆக உயர்த்தி அறிவிப்பு வெளியிட வேண்டும் என மாற்றுத்திறனாளி பாதுகாப்பு நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய பொருளாளர் சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News