மயிலாடுதுறையில் சத்துணவு ஓய்வூதியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் சத்துணவு ஓய்வூதியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் கமலநாதன் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசின் ஓய்வூதிய சட்ட விதிகளின்படி குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் ரூபாய் 7850 அகவிலைப்படி, மருத்துவபடியுடன் வழங்கிட வேண்டும், பொது சேமநல நிதியில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை ஓய்வூதியர்களுக்கு உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு தமிழக முதல்வர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர்.