மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பட்ஜெட்டில் 1.4.2022 வரை பஞ்சப்படியை நிறுத்தி வைத்து அறிவித்ததைத் திரும்பப் பெற ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது;

Update: 2021-08-17 07:31 GMT
மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
  • whatsapp icon

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஞ்சப்படி உயர்வினை உடனடியாக வழங்கக் கோரி மயிலாடுதுறையில் தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழக பட்ஜெட்டில் 01.04.2022 வரை பஞ்சப்படியை நிறுத்தி வைத்து அறிவித்ததைத் திரும்பப் பெறக் கோரியும், மத்திய அரசு 01.07.2021 முதல் பஞ்சப்படியை வழங்கியது போன்று மாநில அரசும் வழங்க வலியுறுத்தியும், மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொறியாளர் சங்க திட்டத் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் டிஎன்இபி எம்ப்ளாயீஸ் பெடரேஷன், சிஐடியு, ஐஎன்டியுசி, ஐக்கிய சங்கத்தை சேர்ந்தவர்கள் திரளானோர் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News