நகர்ப்புற தேர்தலை முன்னிட்டு சீர்காழியில் அ.தி.மு.க. அலுவலகம் திறப்பு

நகர்ப்புற தேர்தலை முன்னிட்டு சீர்காழி பகுதியில் அ.தி.மு.க. அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

Update: 2022-02-01 01:48 GMT

சீர்காழி அருகே அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் குத்துவிளக்கேற்றி திறந்து வைக்கப்பட்டது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது. பிப்ரவரி 22ஆம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜனவரி 28 முதல் பிப்ரவரி 4 வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளில் தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் மயிலாடுதுறை மாவட்ட அவைத்தலைவர் பி.வி.பாரதி ,மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ்.பவுன்ராஜ் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தனர்.

இதனை தொடர்ந்து வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சிக்குட்பட்ட தேர்தல் அலுவலகம் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் வா.செல்லையன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.சக்தி, உள்ளிட்ட அதிமுக பொறுப்பாளர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News