பல்வேறு கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த உறுப்பினர்கள்
மயிலாடுதுறை அருகே அதிமுக, பாமகவை சேர்ந்தவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி பூம்புகார் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மங்கைநல்லூரில் அதிமுக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி நூற்றுக்கும் மேற்பட்டோர் நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்எம் சித்திக், ஒன்றிய செயலாளர்கள் அப்துல்மாலிக், மங்கைசங்கர் மற்றும் மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.