ஆதிதிராவிடர் நல பள்ளி, கல்லூரி மாணவியர் விடுதிகள்: மாவட்ட ஆட்சியர் திறப்பு
பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு ரூ. 2.64 கோடி மதிப்பீட்டில் 2 புதிய தங்கும் விடுதிகள் கட்டிமுடிக்கப்பட்டது
தமிழக முதலமைச்சரால் காணோலிக்காட்சி வாயிலாக மயிலாடுதுறையில் திறந்து வைக்கப்பட்ட ஆதிதிராவிடர் நல பள்ளி, கல்லூரி மாணவியர் விடுதிகளை, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் குத்துவிளக்கேற்றி ஆதிதிராவிடர் நலத்துறையினரிடம் ஒப்படைத்தார்
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் பின்புறம், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு, தங்கும் விடுதிளுக்கான புதிய கட்டிடம் தனித்தனியாக கட்டி முடிக்கப்பட்டது. மாநில அரசு நிதி 264.44 லட்சம் மதிப்பீட்டில், ஒரு கட்டிடத்தில் 50 மாணவிகள் தங்குவதற்கு வசதியாக 5 அறைகள், உணவுக்கூடம், சமயலறை, உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்ட இந்த விடுதிகளை, முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.இதையொட்டி, மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளை, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து விடுதி மைதானத்தில், நிழல் தரும் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இதில், மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் ராமலிங்கம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதேபோல், தில்லையாடி கிராமத்தில் மாணவர் மற்றும் மாணவியர் விடுதிகள் திறந்து வைக்கப்பட்டது.