சீர்காழி அருகே மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழப்பு
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே குளங்கரை பகுதியில் மின்கம்பத்தில் இருந்து வீட்டுக்கு செல்லும் மின் இணைப்பை, அவ்வழியே சென்ற லாரி அறுத்து சென்றது. அந்த கம்பி சாலையில் தொங்கியுள்ளது. இதனை அறியாமல் சாலையில் சென்ற சிங்காரவேல் (65) மீது அறுந்து கிடந்த ஒயர் பட்டுள்ளது. இதில் அவர் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியுள்ளார். இதனை பார்த்த அதே பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான அரவிந்தன் (25) அவரை காப்பாற்ற முயன்றுள்ளார். இதில் இருவரும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து சீர்காழியில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.