மயிலாடுதுறை மாவட்டத்தில் 100% தடுப்பூசி செலுத்திய நகரம் மற்றும் கிராமங்களுக்கு விருது

மயிலாடுதுறை மாவட்டத்தில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய நகரம் மற்றும் கிராமங்களுக்கு மாவட்ட ஆட்சியர் விருது வழங்கி பாராட்டு

Update: 2021-08-07 17:31 GMT

100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்ட கிராமங்களில் பணியாற்றிய வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் மருத்துவப்பணியாளர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான முழு விழிப்புணர்வு அளிக்கப்பட்டு அனைத்து பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

மேலும், நடமாடும் தடுப்பூசி வாகனங்கள் மூலமாக பல்வேறு இடங்களுக்குச் சென்றும் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 182,261 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 32,466 பேருக்கும் என மொத்தம் 214,727 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

இதில், கொடியம்பாளையம், தொடுவாய், புதுப்பட்டினம் உள்ளிட்ட 8 கிராமங்களிலும், மயிலாடுதுறை, சீர்காழி நகராட்சிகளில் தலா 1 வார்டிலும் வசிக்கும் பொதுமக்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

இதனை பாராட்டும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலாடுதுறை ராஜகுமார், பூம்புகார் நிவேதாமுருகன், சீர்காழி பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு, 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்ட கிராமங்களில் பணியாற்றிய வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் மருத்துவப்பணியாளர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News