100சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு..!
மயிலாடுதுறையில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தனியார் அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு குறும்படம் வெளியிடப்பட்டது.;
100. சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் வகையில்,பசுமை நேசக் கரங்கள் அறக்கட்டளை சார்பாக குறும்படம் வெளியிடப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம்.மயிலாடுதுறை வள்ளலாரகம் ஊராட்சி பகுதியில், 100. சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் வகையிலும், ஓட்டுக்கு பணம் பெறக்கூடாது, சாதி மதங்களை கடந்து பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி குறும்படம் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு சாமி.செல்வம் தலைமை தாங்கினார்.பசுமை நேசக் கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் R.R.பாபு வரவேற்புரை ஆற்றினார்.ஓய்வு பெற்ற காவல் துறை துணை கண்கானிப்பாளர் சச்சிதானந்தம் தேர்தல் விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்டார்.
அதை சமூக விழிப்புணர்வு அமைப்பாளர் அப்பர் சுந்தரம் பெற்றுக் கொண்டார்.தேர்தலில், எல்லோரும் வாக்களிப்போம் ஓட்டை விற்க மாட்டோம்,சாதி மதங்களை, விலக்கி,இந்திய ஜனநாயகத்தை காப்போம் என உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் வள்ளலாரகம் ஊராட்சியில் உள்ள அனைத்து பொதுமக்களும் கலந்து கொன்டனர்.
செய்தி ஒரு கண்ணோட்டம்
மயிலாடுதுறையில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி குறும்படம் வெளியீடு!
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், வள்ளலாரகம் ஊராட்சி பகுதியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையிலும், ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது, சாதி மதங்களை கடந்து பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி பசுமை நேசக் கரங்கள் அறக்கட்டளை சார்பாக குறும்படம் வெளியிடப்பட்டது.
நிகழ்வு விவரம்:
தலைமை: சாமி.செல்வம்
வரவேற்புரை: R.R.பாபு (பசுமை நேசக் கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்)
குறும்பட வெளியீடு: ஓய்வு பெற்ற காவல் துறை துணை கண்கானிப்பாளர் சச்சிதானந்தம்
குறும்பட பெறுநர்: சமூக விழிப்புணர்வு அமைப்பாளர் அப்பர் சுந்தரம்
உறுதிமொழி: எல்லோரும் வாக்களிப்போம், ஓட்டை விற்க மாட்டோம், சாதி மதங்களை விலக்கி, இந்திய ஜனநாயகத்தை காப்போம்
பங்கேற்பாளர்கள்: வள்ளலாரகம் ஊராட்சி பொதுமக்கள்
குறும்படத்தின் முக்கியத்துவம்:
- 100% வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்துகிறது
- ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது
- சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு வாக்களிக்க மக்களை ஊக்குவிக்கிறது
- பசுமை நேசக் கரங்கள் அறக்கட்டளையின் முயற்சி:
தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம்
வாக்காளர்கள் பதிவு மற்றும் வாக்குப்பதிவுக்கான உதவி
ஜனநாயக மதிப்புகளை வளர்ப்பதற்கான பணிகள்
மயிலாடுதுறையில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பசுமை நேசக் கரங்கள் அறக்கட்டளை வெளியிட்ட குறும்படம், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி ஜனநாயகத்தை வலுப்படுத்தும் ஒரு முக்கியமான முயற்சியாகும்.