மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியம் பரசலூர் ஊராட்சியில் புதிய டி இ எல் சி கிறிஸ்தவ தேவாலயம் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில், தமிழ்நாடு தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் 13-வது பேராயர் டேனியல் ஜெயராஜ் கலந்துகொண்டு புதிய தேவாலயத்தை திறந்து வைத்து. கொரோனா நோய் தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபடவும், உலக நன்மைக்காகவும், உலக மக்கள் ஒற்றுமை ஓங்கிவிடவும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இதில், தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் சபை குருக்கள் நவராஜ் ஆபிரகாம், ஜான்சன் மான்சிங், செல்லத்துரை, ஜான் தினகர், சார்லஸ் எட்வின்ராஜ், தரங்கம்பாடி பிஷப் ஜான்சன் நினைவு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் சைமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், பொறையார், திருவிளையாட்டம், தரங்கம்பாடி, பரசலூர் ஆகிய பகுதிகளிலிருந்து கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.