மயிலாடுதுறையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

Update: 2021-08-05 15:15 GMT

மயிலாடுதுறையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

மயிலாடுதுறை கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தநிலையில் இன்று மாலை 4 மணி அளவில் மயிலாடுதுறையில் பரவலாக மிதமான மழை பெய்தது. மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை, செம்பனார்கோவில், மணல்மேடு உள்ளிட்ட பகுதியில் மிதமான சாரல் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News