விவசாயிகள் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்
விவசாய பாதிப்புகளை வேளாண் அதிகாரிகள் பார்வையிடாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கண்ணில் கருப்பு துணி கட்டி வயலில் இறங்கி அழுகிய நாற்றுக்களை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம்!;
மயிலாடுதுறை அருகே மேலாநல்லூர் கிராமத்தில் சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக சுமார் 800 ஏக்கருக்கு மேலான நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிர்கள் முற்றிலுமாக வயலில் சாய்ந்து சேதமடைந்துள்ளது. மேலும் மேலாநல்லூர் வடிகால் வாய்காலை தூர்வாராததால் மழை நீர் வடிய வழியின்றி அனைத்து பயிர்களும் அழுகி தூற்நாற்றம் வீசிகிறது. இதுதொடர்பாக மேலாநல்லூர் கிராமத்தில் வேளாண் துறை அதிகாரிகள் யாரும் சென்று பார்வையிடவில்லை என்ற குற்றம்சாட்டினர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கண்ணில் கரும்பு துணி கட்டி வயலில் இறங்கி அழுகிய நாற்றுக்களை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுசம்பந்தமாக வேளாண்துறை அதிகாரிகள் பயிர்ச்சேதத்தை பார்வையிட்டு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும். இன்ஸ்யூரன்ஸ் தொகையை 100 சதவீதம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.